Dhinasari
#கொரோனா #இந்தியா #மருந்து #அயல்நாடுகள் #கோரிக்கை #உதவி கொரோனா மருந்து: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த 30 நாடுகள்! கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தந்து உதவ வேண்டும் என இந்தியாவிடம் 30 நாடுகள் இதுவரை கோரிக்கை விடுத்துள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 14 லட்சத்தை எட்டியுள்ள நிலைநிலையில், 69,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பியைக் கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் அறிவித்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் பரிந்துரை செய்தது. மேலும் கொரோனா பாதிப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்து ஊழியர்களும் இதை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் எனவும் அறிவித்தது. இந்த பரிந்துரைக்குப்பின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25ஆம் தேதி தடை விதித்தது. இதனால் பல்வேறு நாடுகளுக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி கடுமையாக பாதித்தது. இதனையடுத்து, தங்கள் நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரைகளை ஏற்றுமதி செய்து இந்தியா உதவ வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு, சீனா போன்ற நாடுகளுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ள நிலையில், மாத்திரை ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவு எடுக்கமுடியும். இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் துணை இயக்குநர் டாக்டர். ரமன் கங்காகேட்கர் தெரிவித்துள்ளார்.
Dhinasari
Link பாகிஸ்தானில் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து பாகிஸ்தானில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்கவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அழுத்தங்கள் வந்த வண்ணம் உள்ளன. #தப்ளிக் ஜமாத் #தப்லிக்வாதிகள் #பாகிஸ்தான்
Dhinasari
#சமையல் #நலவாழ்வு #ஆரோக்கியமான உணவு #சைட் டிஷ் எக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு! தக்காளி தொக்கு செய்ய தேவையானவை: தக்காளி - 8 வெங்காயம் - 5 மிளகாய்த் தூள் - 2 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி பச்சை மிளகாய் - 3 புளி - கோலி உருண்டையளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள். இதில் தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள். இந்தக் கலவை நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.
Dhinasari
#சமையல் #ஆரோக்கியமான உணவு #சிறுதானியம் #குழந்தைகளூக்காக #சிற்றுண்டி #மாலை டிபன் #டீ ஸ்நாக்ஸ் #காலை டிபன் ஆரோக்கிய உணவு: திணை, சாமை பணியாரம்! தேவையான பொருட்கள்:- சாமை அரிசி - 100 கிராம் திணை - 100 கிராம் இட்லி அரிசி - 100 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் வெந்தயம் - 1/4 தேக்கரண்டி வெங்காயம் - 1 கேரட் தேவையான அளவு கடுகு, உப்பு தேவையான அளவு கொத்த மல்லி தேவையான அளவு கறிவேப்பிலை தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை: திணை, சாமை, இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து ஊற வைக்கவும். பிறகு உப்பு சேர்த்து கிரைண்டர் / மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை 6 - 7மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு தீஞ்சட்டியில், கடுகு, உளுத்தம் பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் குழிப்பணியார சட்டியில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இத்துடன் தக்காளி, வெங்காய சட்னியும் சேர்த்து சாப்பிடலாம்.
Dhinasari
#நலவாழ்வு #பாட்டி வைத்தியம் #வீட்டுக்குறிப்பு #உடல் பருமன் #எடைக்குறைய #எளீய டிப்ஸ் உடல் எடை குறைய.. இத பண்ணுங்க! தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி 2 தேக்கரண்டி லவங்கப்பொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடை காலத்தில் இது அருமருந்து.
Dhinasari
#கொரோனா #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா விஸ்வரூபம் #எடப்பாடி பழனிசாமி 21 நாள் கழிந்து நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு! இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன . பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் மேலும் அறிவிப்புகளைத் தெரிந்து கொள்ள.... Link
Dhinasari
#தமிழகம் #அரியலூர் #பேருந்து #மூன்று வண்ணம் #இரண்டு நாள் #அத்தியாவசியப் பொருட்கள் இரண்டு நாள் வெளிய போலாம்! மூணு கலர்ல பஸ்! எங்க தெரியுமா? மக்கள் வெளியே நடமாடுவதையும் மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டும் வெளியே வரும் படி செய்ய, அரியலூர் மாவட்டத்தில் பச்சை, ஊதா, ரோஸ் என மூன்று வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பாஸ்கள் மூலம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வர முடியும். அதவாது, பச்சை நிற பாஸ்- திங்கள், வியாழன், ஊதா நிற பாஸ்- செவ்வாய், வெள்ளி, ரோஸ் நிற பாஸ்- புதன்,சனிக்கிழமைகளில் பயன்படுத்திக் கொண்டு காய்கறிகள் வாங்கி வரலாம். காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே செல்லும் அந்த பாஸ் மூலம், 15 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தான் செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல் ஒரு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். இருப்பினும், மருத்துவ அவசரங்களுக்கு இந்த பாஸ் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், இந்த பாஸ்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் என்றும் உணவு மற்றும் வேளாண் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்ல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Dhinasari
#கொரோனா #கேரளா #பரிசோதனை மையம் #நடமாடும் பரிசோதனை மையம் கொரோனா: கேரளாவில் நடமாடும் பரிசோதனை மையம்! கேரளாவில் கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ளது. கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க திணறி வரும் நிலையில், பொதுமக்களுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்ய வசதியாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த கலாம்சேரி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ் மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த பரிசோதனைக் கூடத்தை வடிவமைத்துள்ளனர். இதுபோன்றதொரு கட்டமைப்புதான் தென் கொரியாவில் அதிகளவில் மருத்துவப் பரிசோதனை நடத்த பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் வெறும் 2 நிமிடத்தில் ஒருவருக்கு ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அறை மூலம், பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் ஏற்படாது. இந்த பாதுகாப்பு அறையை அமைக்க ரூ.40 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் மூடப்பட்டு, ஒரு பக்கம் கண்ணாடி சுவரைக் கொடு இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும், கண்ணாடி சுவரில் இரண்டு கையுறைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக மருத்துவப் பணியாளர் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம். ஒவ்வொரு முறை பரிசோதனை நடத்தப்பட்டதும், கையுறைகளும், கேபினும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும். தற்போதைக்கு இரண்டு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் குறுகிய காலத்தில் மேலும் பல பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dhinasari
Link #சினிமா #சினிநியூஸ் #திவ்யா ஸ்ரீ #ரம்யா ஸ்ரீ #கவர்ச்சி
Dhinasari
மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன. ஏதோ கொரோனா தொற்று 21 நாளில் அகன்று விடும் என்றெல்லாம் எண்ணாமல், இந்த தொற்றின் பரவலால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த விவரங்களை இஸ்லாமிய இளைஞர்கள் அந்த சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டும். இளைஞர்கள் சொன்னால் பெற்றோர்கள் கேட்கும் காலம் இது. #கொரோனா #கொரோனா அறிவுரை #கொரோனா தடுப்பு நடவடிக்கை #கொரோனா விஸ்வரூபம் Link
Dhinasari
பாஜக., கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் (ஏப்.,06) 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து கட்சியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடினார். Link #மோடி உரை #Modi #மோடிபேச்சு
Dhinasari
Link #கொரோனா #நயன்தாரா #விக்னேஷ் சிவன் #விளக்கு #05-04-2020 #இரவு 9 மணி 9 நிமிடம்
Dhinasari
#தமிழகம் #மாணவி #மயக்கம் #பெற்றோர் #மருத்துவமனை #அதிர்ச்சி மயங்கி விழுந்த 7 ஆம் வகுப்பு மாணவி! நேர்ந்த விபரீதத்தில் அதிர்ந்த பெற்றோர்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில் வசித்து வந்தவர் பிரபு. இவரது மகள் பூவிகா. 13 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அந்த சிறுமி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென பூவிகா மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்டு பதறிப்போன அவரது பெற்றோர்கள் கதறிக்கொண்டே மூச்சுப்பேச்சின்றி கிடந்த மகளை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி சாணிப்பவுடரை குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Dhinasari
#கொரோனா #பாலிவுட் #நட்சத்திரம் #உயிரிழப்பு கொரோனா: மேலும் ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் உயிரிழப்பு! பொதுவாக ஹாலிவுட் நட்சத்திரங்கள் 90 வயதுக்கு மேல் வாழ்வார்கள். தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு எளிதாக பரவி அவர்களின் உயிரை பலிகொண்டு வருகிறது. இதுவரை 60 வயதை கடந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க், எட்டி ஜார்ஜ் உள்ளிட்ட பலர் பலியாகி இருக்கிறார்கள்.இந்த நிலையில் மற்றுமொரு ஹாலிவுட் நடிகையான பேட்ரியா பாஸ்வொர்த்தும் இந்த நோய்க்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 86. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார்.கலிபோர்னியாவைச் சேர்ந்த பேட்ரியா, கருப்பு வெள்ளை ஹாலிவுட் படங்களின் நாயகியாக இருந்தார். ரெட் ஸ்கோர், கோல்ட் வார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
Dhinasari
37 வருசம் முன்னே... நம்ம ரஜினி காந்த் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்தார் தெரியுமா..? இப்படித்தான்..! பாருங்க... பாருங்க... #கொரோனா ஜோக் #கொரோனாஜோக்ஸ்
00:14
Dhinasari
#கொரோனா #கனிகா கபூர் #இந்தியா #நெகட்டிவ் கொரோனா: நெகட்டிவ் வந்துடுச்சு.. வீட்டுக்கும் வந்தாச்சு.. கனிகா கபூர்! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் டெஸ்ட் நெகட்டிவானதால் வீடு திரும்பியுள்ளார். பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர், லண்டனில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி இந்தியா வந்த அவர், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இருந்து எஸ்கேப்பானார். தொடர்ந்து மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்த கனிகா கபூர் கடந்த 11 ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊரான லக்னோவுக்கு சென்றுள்ளார். மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்றார் கனிகா கபூர். இந்த பார்ட்டியில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில் 16ஆம் தேதி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. இதனால் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் கனிகா கபூருடன் நெருக்கமாக இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது. அதில் லோக்சபா எம்.பியான துஷ்யந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்ததால் குடியரசுத் தலைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவோடு இரவாக குடியரசுத் தலைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. வைரஸ் குறித்த தனது அலட்சியம், அவரது பயண விவரங்களை மறைத்து, மக்களை சந்தித்தது, கொரோனா வைரஸுடன் பாட்டியில் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும் விமர்சனத்துக்குள்ளானார் கனிகா கபூர். நாடு முழுவதையும் பெரும் பீதிக்குள்ளாக்கிய கனிகா கபூருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மருத்துவமனையுடன் மல்லுக்கட்டு இதனை தொடர்ந்து கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதற்குள் மருத்துவமனையில் தனக்கு ஒரு ஆரஞ்சும் ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழங்களையும் கொடுத்தது என்றும் போதுமான வசதிகள் இல்லை என்று கூறியும் மருத்துவமனை நிர்வாகத்துடன் மல்லுக்கட்டினார் கனிகா கபூர். 4 டெஸ்ட் பாஸிட்டிவ் இருப்பினும் கனிகா கபூருக்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தது. ஒரு பக்கம் அவருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. முதல் 4 பரிசோதனைகளில் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவாக இருந்தது. இதனால், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அண்மையில் அவருக்கு நடத்தப்பட்ட ஐந்தாவது பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனை தொடர்ந்தும் மறு பரிசோதனைக்காக தொடர்ந்து சிகிச்சையிலேயே வைக்கப்பட்டார் கனிகா கபூர். இந்நிலையில் நேற்று அவருக்கு நடத்தப்பட்ட ஆறாவது பரிசோதனையில், கொரோனா டெஸ்ட் நெகட்டிவானது. இதனை தொடர்ந்து கனிகா கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனிகா கபூர் வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பாலிவுட் செலிபிரிட்டி கனிகா கபூர் ஆவார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது, அதிகாரிகள் கூறியும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கனிகா கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dhinasari
#கொரோனா #05-04-2020 #இரவு 9 மணி 9 நிமிடம் #பட்டாசு #வெடித்து #கைது நேற்று இரவு பட்டாசு வெடித்ததற்காக 96 பேர் கைது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 'இரவு 9 மணி -9 நிமிட' நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததற்காக, கொல்கத்தா காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 98 பேரை கைது செய்துள்ளனர். முழு அடைப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக இந்த கைதுகள் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நகரத்தின் பிற இடங்களைப் போலவே, கொல்கத்தாவின் ராஜ் பவனிலும் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளின் விளக்குகள் காணப்பட்டன. எனினும் மக்கள் விளக்கு ஏற்றுவது தவிர பட்டாசு வெடித்து முழு அடைப்பு விதிகளை மீறுவது கண்டிக்கத்தக்கது என்ற அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைப்பெற்றது எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் முழுஅடைப்பு விதிகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நகர காவல்துறை தினசரி நூற்றுக்கணக்கான கைதுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில், பூட்டப்பட்டதை மீறியதற்காக 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசு வழங்கிய தகவல்களின்படி, மாநிலத்தில் 60 COVID-19 வழக்குகள் செயலில் உள்ளன. எனினும் ஏப்ரல் 5-ஆம் தேதி எந்த தகவலும் அரசாங்கத்தால் பகிரப்படவில்லை. வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் இறந்துவிட்டதாக அரசாங்கம் கருதுகிறது. இறந்து நேர்மறை பரிசோதனை செய்த மற்ற நான்கு நோயாளிகளின் விஷயத்தில், மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா, வைரஸ் தொற்று அல்லது நோயாளிகளின் நோயுற்ற நிலைமைகளால் இறப்புகள் நிகழ்ந்ததா என்பதை மருத்துவர்கள் நிபுணர் குழு பரிசீலித்து வருவதாகக் கூறினார். இந்நிலையில் மாநிலத்தில் முழு அடைப்பு விதிகளை கடைப்பிடித்தல் மிகவும் அவசியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
Dhinasari
#கொரோனா #மருத்துவமனை #இங்கிலாந்து #பிரதமர் இன்னும் குறையாத கொரோனா! மருத்துவமனையில் இங்கிலாந்து பிரதமர்! கொரோனா வைரஸ் மொத்த உலக நாடுகளையும் ஆட்டுவித்து மனித குலத்தை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. ஏழை, பணக்காரன், உலகத் தலைவர், பெரும் பிரபலம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் இங்கிலாந்தில் இதுவரை 47,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இளவரசர் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக அவரே அறிவித்தார். இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகச் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பரிசோதனைக்காக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பத்து நாள்கள் ஆன நிலையிலும் வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தேசிய சுகாதார ஊழியர்களின் அபரிமிதமான உழைப்புக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பிற உயிர்களைக் காப்பாற்ற அரசின் ஆலோசனையைப் பின்பற்றும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்" என செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை அதிக வெப்பநிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற முடிவெடுத்துள்ளார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் போன்ற அனைவரும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dhinasari
அரசை கண்டித்து அறிக்கை விடும் தமுமுக., பிஎஃப்ஐ., இன்ன பிற இஸ்லாமிய அமைப்புகள் கவனத்துக்கு...! முட்டாள் சமூகமாகவே இருக்க வேண்டாம் சற்று சிந்தியுங்கள். மார்க்கமும் குர்ஆனும் இஸ்லாமியர்களை ஒவ்வெரரு முறையும் சிந்திக்கவே சொல்கிறது. #கொரோனா #கொரோனா முன்னெச்சரிக்கை #கொரோனா அறிவுரை #கொரோனா விழிப்புணர்வு Link
Dhinasari
#கொரோனா #உலகம் #வியட்நாம் கொரோனா: வியக்க வைக்கும் வியட்நாம்! கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மிக குட்டி நாடான வியட்நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து வியட்நாமில் வெகு சில நாட்களில் 160 பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேகமாக களமிறங்கிய வியட்நாம் அரசு நாடு முழுக்க தடைகளை அறிவிக்க தொடங்கியது. இந்தியா கொரோனா குறித்து யோசிக்கும் முன்பே, வியட்நாம் ஜனவரி பாதியில் தங்கள் நாட்டு எல்லையை மொத்தமாக மூடியது. எல்லைகளை மூடிய பின் தங்கள் நாட்டிற்குள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது வியட்நாம். கொரோனாவை எதிர்கொள்ள வியட்நாம் நாட்டிடம் போதிய மருத்துவ வசதி இல்லை. அதேபோல் போதிய தொழில்நுட்ப வசதியும் இல்லை. இதனால் அந்நாட்டு அரசு மக்களிடம் நேரடியாக சென்று பேசியது. மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு இருந்ததால் வீட்டில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். மக்களுக்கான உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் விதிமுறையை கடைப்பிடித்து, வீட்டில் இருந்தே பணிகளை செய்தனர். மொத்தமாக 240 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 90 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் குணமடையும் நிலையில் உள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
और देखें