TAMILAGAASIRIYAR
இன்றைய (24/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16277 ஆக உயர்வு.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழப்பு இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு - 111 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TAMILAGAASIRIYAR
தெரு ஒன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள். " ஒரு கட்டு கீரை என்ன விலை....?" " ஓரணாம்மா" "ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ" "இல்லம்மா வராதும்மா". " அதெல்லாம் முடியாது.அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு, "மேல காலணா போட்டு கொடுங்கம்மா"என்கிறாள் "முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள். "என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க, "இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்" "சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். " ”இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள். எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க அதற்கு அந்த தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள். நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது..
TAMILAGAASIRIYAR
#படித்ததில்_பிடித்தது #இன்றுகழற்சிங்கநாயனார் #குரு_பூஜை #சிவத்தொண்டில்சிறந்த_கழற்சிங்கர்! சிவ அபராதச் செயல்களாக சிலவற்றை ஆகமங்களிலும், பூஜை பத்ததிகளிலிலும் நமக்கு அறிவுரைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் ஆலயங்களில் ஆண்டவனுக்குச் செய்யப்படும் திக்ஷகிடச உபசாரங்களில் சிறப்பான அங்கம் வகிக்கும் புஷ்ப கைங்கர்யத்தில் அதைப் பறிப்பவர்களும், கட்டுபவர்களும் வாயைத் துணியினால் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நியதி உட்பட, எவை எவை எந்த எந்த காலங்களில் (காலை, மதியம், மாலை) பூஜைக்கு ஏற்றவை, எத்தகைய புஷ்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் வாசனை நுகரப்பட்ட பூக்களை உபயோகப்படுத்தக்கூடாது என்ற விதியும் அடங்கும். சிவ ஆராதனைக்குரிய புஷ்பத்தை அகஸ்மாத்தாக நுகர்ந்ததால் அது சிறிய குற்றமானாலும் பெரிய சிவ அபதாரமாகக் கருதப்பட்டு தன் அன்பிற்கு பாத்திரமான மனையாளையின் கையையே வெட்டித்துணித்தான் ஓர் அரசன். இந்த செயலைச் செய்த அம்மாமன்னன் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரிசையிலும் இடம் பெற்றான். அவரே கழற்சிங்க நாயனார் என்று பின்னால் அறியப்பட்ட பல்லவ மன்னன். கழற்சிங்கர் காஞ்சியில் அவதரித்ததாகச் சொல்லப்படுகின்றது. ஐயடிகள் காடவர் கோன் நாயனாரின் வம்சத்தைச் சேர்ந்தவர். மிகுந்த சிவபக்தி உள்ள பல்லவ பேரரசன். பல திருக்கோயில்களுக்குத் திருத்தொண்டு புரிந்து, பல சிவதலங்களுக்குச் சென்று வழிபட்ட அவர், ஒரு சமயம் தனது பட்டத்து அரசியாருடன் ஆரூர் அண்ணலைக் காணும் பொருட்டு திருவாரூர் வந்தடைந்தார். புற்றிடங் கொண்ட புண்ணியரைக் கண்ணீர் மல்கி கை கூப்பி, உள்ளம் உருகித் தரிசித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பட்டத்து நாயகியோ கோயிலைச் சுற்றிப்பார்ப்பதும், சிற்பங்களை ரசிப்பதுமாக வலம் வருகையில் ஆலயத்தில் திருமாலைகள் கட்டும் திருமண்டபத்திற்கு வந்தடைந்தாள். அங்கு ஒரு புஷ்பம் கீழே கிடந்தது. அதன் அழகில் மனதைப்பறி கொடுத்த அரசி வாசனையை அறியும் பொருட்டு பழக்கத்தின் காரணமாக உடனே எடுத்து முகர்ந்து பார்த்தாள். அவ்வமயம், ஆலயத்திற்கு இறை தரிசனத்திற்காக வந்த செருத்துணை நாயனார் இதனைக் கண்ணுற்றார். இவரும் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் சிவ அபராதச் செயல்களைப் புரிந்தவர்களைக் கண்டால் உடனே தண்டிப்பது வழக்கம். பல்லவ அரசியின் செயலைக் கண்ட அவர் மிகுந்த சினம் கொண்டு அவ்வரசியின் மூக்கை அரிந்தார். வெட்டுக்காயம்பட்ட அரசியும் கீழே விழுந்து துடித்தாள். இதனைக் கேள்விப்பட்ட கழற்சிங்கர் இந்த துணிகரச் செயலை செய்தவர் யார்? என கோபத்துடன் அங்கிருந்தவர்களிடம், வினவ, உடனே செருத்துணையார் அமைதியாக மன்னர் அருகில் சென்று நடந்தவற்றை விவரித்துவிட்டு சிவ பூஜைக்குரிய பூவினை முகர்ந்ததால் இந்த தண்டனை தரும்படி நேரிட்டது என்றார். கழற்சிங்கர் செருத்துணையாரை நோக்கி, "நீவீர் சரியான தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை, மலரை முகர்ந்தது குற்றம் தான், முதலில் மலரை எடுத்தது இவளது கை தானே? அதை வெட்டி வீழ்த்துவது தான் முறை" எனக்கூறியவாறு தனது வாளினால் ராணியின் கரத்தை வளையல்களோடு துணித்தான். இந்நிகழ்வை சேக்கிழார் பெருமான், "கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வாசப்பூத் தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துணிப்ப தென்று பட்டமும் அணிந்து காதல் பயில்பெருந் தேவி யான மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தாரன்றே.' என்று தனது பெரியபுராணத்தில் அழகுபட பாடியுள்ளார். ஆரூர் இறைவனும் இறைவியும் இடப வாகனராய் காட்சியளித்து அனைவருக்கும் அருளினர். கை வெட்டுண்ட அரசியும் பழைய நிலையை அடைந்தாள். பாரபட்சமின்றி செயற்பட்டு நீதியை நிலை நாட்டிய கழற்சிங்க நாயனார் தொடர்ந்து சிவத் தொண்டுகள் புரிந்து சிவபெருமானின் திருவடிநிழலை அடைந்தார். இந்த நாயனாரின் திருநட்சத்திரம் வைகாசி மாதம், பரணி நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். காஞ்சியில் ஏகம்பரேஸ்வரர் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி உண்டு.
TAMILAGAASIRIYAR
குபேர விளக்கை எந்த நேரத்தில் ஏற்றுவது நல்லது..? ஏற்றும் முறை என்ன...? Webdunia செல்வத்தின் அதிபதி குபேரர். நம் வீட்டில் அனைத்து செல்வங்களும், நிலைத்து இருக்க குபேரரை வழிபட வேண்டும். குபேரர் அருள் கிடைக்க குபேர விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரர் தீபம் ஏற்ற சரியான நேரம்: அதாவது குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் குபேர விளக்கில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அந்த கோலத்திற்கு செம்மண் பட்டை இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் மஞ்சள் வைத்து, மற்றொரு பகுதியில் குங்குமம் வைத்து நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும். பிறகு நிலைப்படியின் இருபுறமும் பூ வைக்க வேண்டும். வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி குபேரர் விளக்கு ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் கரையும். இந்த குபேர விளக்கு ஏற்றும் முறையை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.
TAMILAGAASIRIYAR
எதிரிகளின் தொல்லை நீக்கும் வராகி அம்மன்: வணங்கும் முறை Edited By Aravindhan K | வராஹி அம்மன் மூல மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், எதிரிகளின் தொல்லைகளும், எதிர்வினைகள், தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். வராகி அம்மன் மந்திரம், எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பார்ப்போம்... நம் வாழ்வில் பல கஷ்டங்கள் நம் செயலால் ஏற்படுகின்றது. நம் வினைகளாலும், நாம் தற்ப்போது செய்து வரும் தவறான செயல்களால் பிரச்னைகளிலும், துன்பங்களிலும் சிக்கித் தவிக்கின்றோம். பலர் இதன் மூலம் எதிரிகளால் தொல்லைகளும் அனுபவிக்கும் நிலை இருக்கும். இப்படி எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பவர்கள் வராஹி அம்மனை வழிபடுதல் அவசியம். வராகி அம்மனை வழிபடுவோருக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. பக்தர்களை காப்பதில் சாந்த ரூபியாக, தாயாக இருக்கும் வராகி அம்மன், அவர்களின் எதிரிகளை அழிக்க ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் வராகி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் தினமும் ஜெபம் செய்து வர அவளின் அருள் கிடைக்கும். விரதங்களின் வகைகளும், விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பூஜை முறைகள் : வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சைப் பருப்பை வேக வைத்து அதனுடன் தேன் மற்றும் நெய்யை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும். இப்படி தினமும் வராகி அம்மனை வழிபட்டு வருவதால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் ஆகும், தொழில், வியாபாரம் விருத்தி அடைந்து செழிக்கும். வராகி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிகச்சிறந்ததாகும். பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் செல்வங்கள் உங்களை தேடிவரும். பிரச்னைகள் விலகும்.
TAMILAGAASIRIYAR
காமதேனுவை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்...!! Webdunia காமதேனு வழிபாடு, நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டும் அற்புத வழிபாடு. காமதேனு வழிபட்டால் உங்களது வீடு சுபீட்சம் பெறும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும். காமதேனு விக்ரஹம் வைத்து வழிபடுவதால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். பூஜை அறையில் காமதேனு விக்ரஹம் இருப்பது நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். விக்ரஹம் இல்லாதவர்கள் காமதேனு படத்தை வைத்து பூஜை செய்யலாம். காமதேனு விக்ரஹம் கன்றுடன் கூடியதாக கட்டாயம் இருக்க வேண்டும். விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினமும் காமதேனுவை வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்கள். காமதேனு விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அந்த விக்ரஹத்திற்கு தினமும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் பாலாபிஷேகம் செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக முற்றிலுமாக நீங்கிவிடும். காமதேனு விக்ரஹத்தின் கொம்பு பகுதியில், நெற்றிப் பகுதியில், கால்களில், மடியில் என மஞ்சள், குங்குமம் இட வேண்டும். பசுவின் கன்றிற்கும் இது போல் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். காமதேனுவிற்கு மல்லிகைப்பூ சாற்ற வேண்டும். பின்னர் உங்களின் இரு கரங்களாலும் காமதேனுவை தொட்டபடி, உங்களுக்கு இருக்கும் குறைகளை, கோரிக்கைகளை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு வேண்டி கொண்டபின் அப்படியே கைகளை எடுக்காமல், கீழே உள்ள மந்திரத்தை 54 முறை உச்சரிக்க வேண்டும். காமதேனு மந்திரம்: ஓம் சுபகாயை வித்மஹே! காமதாத்திரியை, சதீமஹி தந்னோ தேனு ப்ரசோதயத். இந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும்.
TAMILAGAASIRIYAR
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம் Patrikai காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் நந்தி வர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மகாவிஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது. கோவிலின் மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும் படுத்த கோலங்களில், விஷ்ணுவின் மிகப் பெரும் திருவுருவச் சிலைகளைக் காணலாம். இந்த கோவிலுக்கு வருடம் முழுவ்தும் விஷ்ணுவின் அருளை வேண்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலின் முக்கியமான கவர்ந்திழுக்கும் அம்சமான, “ஆயிரங்கால் மண்டபத்தை” காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு வருகின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. வைகுந்த பெருமாள்கோவிலின் நடைபாதைகள் யாவற்றையும், சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. இந்த கோவிலின் கட்டுமானம், இந்து மதச் சிறப்பு மட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் ஆகும். கோவிலின் சுவர்களில், சாளுக்கியருக்கும், பல்லவர்களுக்கும் நடைபெற்ற போரினைப் பற்றிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன.
TAMILAGAASIRIYAR
வாஸ்துப்படி படிக்கும் அறையை எந்த திசையில் அமைக்கலாம்...? Webdunia வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறை, எப்படி இருக்கவேண்டும், அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். வாஸ்துவில் மிகவும் அடிப்படையான விஷயம், காற்றும் சூரியனும்தான். சூரிய வெளிச்சமும் சுகாதாரமான காற்றோட்டமும் இருக்கும் அறையில் நம் மனம் எளிதாகவே படிப்பில் கவனம் செலுத்தும். படிக்கும் அறையை வடகிழக்குப் பகுதியில் அமைப்பது நல்லது. அதிலும் அந்தக் குழந்தை பூமியின் சகல ஐஸ்வரியங்களும் பெற சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே வரும் வகையில் அமைக்கப்பட்ட அறையில் படிப்பது நன்மை பயக்கும். காற்றும் சூரிய வெளிச்சமும் ஒரு வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அவசியம் வந்தே ஆகவேண்டும். அப்படி வரவேண்டுமானால் அங்கு அமைந்திருக்கும் அறையில் ஜன்னல் இருப்பது அவசியம். வீட்டில் படிக்கும் அறை அல்லது நூலகத்தை மேற்குதிசையில் அமைப்பது சிறந்தது.அந்த அறையில் வாஸ்துப் படி கிழக்கு நோக்கியப்படி நாற்காலியைப் போட்டு படிக்க வேண்டும்.மற்றும் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம். ஆனால் தெற்குச்சுவருக்கு ஒட்டினாற் போல நாற்காலியை போட வேண்டும். மேற்குத் திசைக்கு அடுத்தபடியாக வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு திசையில் அமையும் அறையில் படிக்கும் அறையாக அமைக்கலாம். புத்தக அலமாரிகள் மேற்கு அல்லது தெற்கு சுவருக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த அறைக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும் என்றால் அதில் இளமஞ்சள், இளம்பச்சை, மஞ்சள் ஆகிய நிறத்தில் ஏதாவதுஒரு வண்ணத்தை கலந்து அடிக்க வேண்டும். குழந்தைகள் படுக்கும் அறைகள் வடமேற்கு, மேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் கிழக்கே தலைவைத்து படுப்பது தான் சிறந்தது. ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்துப்படி அமைத்தால் மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும்.வீட்டில் படிப்பறையானது தென்மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும். படிப்பறையில் முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி போன்றவற்றை வைக்கக்கூடாது. குறிப்பாக இந்த அறையில் சூரிய ஒளி நேரடியாக படும்படி அமைக்கக்கூடாது.
TAMILAGAASIRIYAR
இராகு காலம் மற்றும் எம கண்ட நேரங்கள் எப்படி வந்தது தெரியுமா...? Webdunia ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் குறைந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் ஆகும். இதில் கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த முறை. அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருக்கிறது. இராகு காலம், எம கண்டம்: பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்கன் திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு தேவர்கள் போல வேடமிட்டு திருட்டுத் தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் கோபமடைந்த திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அமிர்தம் உண்ட இராகுவின் தலை மற்றும் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு / கேதுக்கள் ஆகின்றன. இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர். இந்த சமயத்தில் தான் காலக் கணிதத்தில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையிலான முக்கியமான ஏழு கிரகங்களுக்கு நாட்களை பிரித்து கொடுத்து விட்ட நிலையில், இராகு / கேதுவிற்கு எதை கொடுப்பது? இறுதியாக சிவபெருமான் ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுக்களுக்கு தர உத்தரவிடுகிறார். அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இராகு / கேதுக்கள் வலிமையுடன் செயல்படுவார்கள். அதுவே இராகு காலம், எம கண்டம் எனப் பெயர் பெற்றது.
TAMILAGAASIRIYAR
நுங்கின் சிறப்புகள்..!! ✅ கோடைக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. ✅ உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. ✅ இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும் இது உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அவற்றின் பயன்கள் பற்றி காண்போம். நுங்கின் பயன்கள் : ✅ நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும். ✅ நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். ✅ பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. ✅ பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. ✅ உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். ✅ கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ✅ இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். ✅ நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. ✅ பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். ✅ நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. ✅ கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம். ✅ பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். ✅ நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்
TAMILAGAASIRIYAR
தமிழில் எழுதும் போது நாம் செய்யும் தவறுகள்...... 1. வாழ்த்துக்கள் என்பது தவறு. "வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது. 2. வாழ்க வளமுடன் என்பது தவறு. " வாழ்க வளத்துடன் " என்பதே சரி. 3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே சரி. " மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது. " மங்கல இசை " என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ). 4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு என்பது தவறு. நச்சு என்றால் நஞ்சு (விஷம்)(விடம்). நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள். நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது. நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன். சுருக்கென்று எடுத்துக் கொள்க. விளக்கம்..... இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர். ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள். ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர். இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள். திருவள்ளுவர் தம் குறளில் , மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு - என்று பாடியிருக்கிறார். காண்க - மங்கலம். ( மங்களமில்லை ) வாழ்க வளத்துடன் ....
TAMILAGAASIRIYAR
'' வாசிப்பை நேசிப்போம்.'' ........................................................ வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது”. நம்மை ஏமாற்றாத, சிறந்த நண்பன் புத்தகம்தான்... நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; துணிவான முடிவுகள் எடுக்க புத்தகம் துணை புரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி காணும்...! புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தரப் போராடி உள்ளர்கள்; வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள்...! புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும். மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும் போது நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டு தலையும், ஆலோசனைகளையும் வழங்கும்... நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம்... அதைப் போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்... புத்தகங்கள் வாங்க தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனம் ஆகும்...! அது, வட்டியை ஈட்டித் தருவதைப் போல அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்...! புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும் பான்மையோர் கூறுகிறார்கள்... விமானம்,பேருந்து தொடர்வண்டி பயணத்தின்போது மருத்துவரை,உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்க காத்து இருக்கும் போதும், புத்தகங்கள் படிக்கலாம்... நேரம் வீனாய்க் கழியாமல், பயன் படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் நேரத்தை ஒதுக்கலாம்... நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கிறோம்... ஆனால், நம்மை உயர்த்திக்கொள்ள புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்பித் தள்ளுகின்றோம். இது வேடிக்கையாக இல்லை...?! எனவே, நமக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்... நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவோம்... குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்து சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்டுவோம்... ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும்... புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர் களாகவும்,இனிய பண்புள்ளவர்களாகவும்,நேர்மை,, நாணயம் உடையவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்... நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப் போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமை ஆக கொண்டவர்கள் வாசிப்பதை உயிர் என்று மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்... புத்தகங்கள் பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சி அளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்...! ஆம் நண்பர்களே...! அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்...! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்!புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும்,கலங்கரை தீபங்கள் என்போம்...!
TAMILAGAASIRIYAR
அறிந்து கொள்வோமா - இரட்டைச்சொற்கள்🤩 🍀. குண்டக்க மண்டக்க : 🔸குண்டக்க : இடுப்புப்பகுதி, 🔸மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்... 🍀. அந்தி, சந்தி: 🔸அந்தி : . மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸சந்தி: . இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. 🍀. அக்குவேர்,ஆணிவேர்:🔸 அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...🔸 ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்... 🍀. அரை குறை: 🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..🔸 குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... 🍀. அக்கம், பக்கம்: 🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 பக்கம்: பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்... 🍀 கார சாரம் : 🔸காரம் : உறைப்பு சுவையுள்ளது... 🔸சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது... 🍀.இசகு பிசகு: 🔸 இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றறுபவர்களிடம் ஏமாறுதல்... 🔸 பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்... 🍀 .இடக்கு முடக்கு: 🔸 இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்... 🔸 முடக்கு : கடுமையாக எதிர்த்து .தடுத்து பேசுதல்... 🍀. ஆட்டம் பாட்டம் : 🔸 ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது... 🔸பாட்டம் : ஆட்டத்திற்கு பொருத்தமில்லாமல் பாடுவது... 🍀. அலுப்பு சலிப்பு : 🔸. அலுப்பு: உடலில் உண்டாகும் வலி... 🔸. சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,.. 🍀. தோட்டம் துரவு , தோப்புது ரவு, 🔸 தோட்டம் : செடி, கொடி கிரை பயிரிடப்படும் இடம்... 🔸தோப்பு : கூட்டமாக இருக்கும் மரங்கள்... 🔸துரவு: கிணறு... 🍀. காடு கரை : 🔸 காடு : மேட்டு நிலம் (முல்லை)... 🔸 கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)... 🍀.காவும் கழனியும்: 🔸 கா : சோலை... 🔸 கழனி: வயல்.. (மருதம் )... 🍀 நத்தம் புறம்போக்கு : 🔸 நத்தம் : ஊருக்குப் பொதுவான மந்தை... 🔸 புறம்போக்கு : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்... 🍀 பழக்கம் வழக்கம் : 🔸 பழக்கம் : ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது... 🔸 வழக்கம் : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது.. 🍀சத்திரம் சாவடி : 🔸 சத்திரம் : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி )... 🔸 சாவடி: இலவசமாக தங்கும் இடம்... 🍀. நொண்டி நொடம் : 🔸. நொண்டி : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.... 🔸. நொடம் : கை, கால் . செயல் சுற்று இருப்பவர்.. 🍀. பற்று பாசம் : 🔸 பற்று :நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்... 🔸 பாசம் : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது... 🍀 ஏட்டிக்கு போட்டி : 🔸 ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது... ( ஏடம் : விருப்பம்) 🔸 போட்டி : விரும்பும் பொருள். செயலுக்கு எதிராக வருவது தான்... கிண்டலும் கேலியும்: 🔸 கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.... 🔸 கேலி : எள்ளி நகைப்பது,.. 🍀. ஒட்டு உறவு : 🔸 ஒட்டு : இரத்த சம் பந்தம் உடையவர்கள்... உறவு : கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்மமானவர்கள்... 🍀 பட்டி தொட்டி : 🔸 பட்டி: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)... 🔸 தொட்டி : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்... 🍀 கடை கண்ணி : 🔸 கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்... 🔸 கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்... 🍀 பேரும் புகழம் : 🔸 பேர் : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.. 🔸 புகழ்: வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.... 🍀. நேரம் காலம் : 🔸 ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது (Time,.. 🔸 காலம் : ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.. 🍀 பழி பாவம் :.. 🔸 பழி: நமக்கு தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலை செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்... 🔸 பாவம், : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி... 🍀 கூச்சல் குழப்பம்: 🔸 கூச்சல் : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ - கூவுதல்) 🔸 குழப்பம்: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்... 🍀 நகை நட்டு : 🔸 நகை : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியானம்.) 🔸 நகை : சிறிய அணிகலன்கள்.. 🍀 பிள்ளை குட்டி: 🔸பிள்ளை : பெதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்... 🔸 குட்டி: பெண் குழந்தையை குறிக்கும்... 🍀 பங்கு பாகம்: 🔸 பங்கு: கையிருப்பு.. பணம்,நகை, பாத்திரம்.( அசையும் சொத்து)... 🔸 பாகம் : வீடு, நிலம்.. அசையா சொத்து... 🍀வாட்டம் சாட்டம் : 🔸 வாட்டம் : வளமான தோற்றம், வாளிப்பான உடல்... 🔸 சாட்டம் : வளமுள்ள கனம். தோற்றப் பொலிவு... 🍀. காய் கறி : 🔸 காய்: காய்களின் வகைகள்... 🔸 கறி : சைவ உணவில் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகள்... 🍀 ஈவு இரக்கம் : 🔸 ஈவு : (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்... 🔸 இரக்கம் : பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்... 🍀 பொய்யும் புரட்டும்: 🔸 பொய்: உண்மையில்லாததை கூறுவது... 🔸 புரட்டு : ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை யென கூறி நடிப்பது... 🍀 சூடு சொரனை: 🔸 சூடு : ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனகொதிப்பு... 🔸 சொரனை: நமக்கு ஏற்படும் மான உணர்வு,,,, நன்றி:ஔவை தமிழ்ச்சங்கம் புதுடெல்லி. 🙏
TAMILAGAASIRIYAR
கார்ல் லின்னேயஸ் 👉 நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார். 👉 இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள்இ பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். 👉 புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்துஇ தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 👉 1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்திஇ வகைப்படுத்திஇ அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். 👉 தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 1778ஆம் ஆண்டு மறைந்தார்.
TAMILAGAASIRIYAR
உலக ஆமைகள் தினம் 🐢 உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதைத் தடுக்கவும்இ அழிவிலிருந்து பாதுகாக்கவும்இ மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
TAMILAGAASIRIYAR
படித்ததில் பிடித்தது - சிந்திப்பீர்களா !!!! ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக்கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்! என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது! அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன். ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது. மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட்.பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது. ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன். நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன். அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன். சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.“சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?” “ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது. அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது! இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள். இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை. நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்! சிந்திப்பீர்களா!!!????? படித்ததை பகிர்தல்
TAMILAGAASIRIYAR
TAMILAGAASIRIYAR
🕉🔯ஶ்ரீராமஜெயம்.🔯🕉 🙏பஞ்சாங்கம் ~ வைகாசி~ 07 ~{20.05.2020.} புதன்கிழமை. 1.வருடம் ~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}. 2.அயனம் ~ உத்தராயணம். 3.ருது ~ வஸந்த ருதௌ. 4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்). 5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம். 6.திதி ~ திரயோதசி. ஸ்ரார்த்த திதி ~ திரயோதசி . 7.நாள் ~ புதன்கிழமை .{ ஸௌம்யவாஸரம்} ~~~~ 8.நக்ஷத்திரம் ~ அஸ்வினி . யோகம் ~ யோகம் சரி இல்லை. கரணம் ~ கரஜை, வணிஜை. நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM . & 04.30 PM ~ 05.30 PM. ராகு காலம் ~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM . எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM. குளிகை ~ 10.30 AM ~ 12.00 NOON. சூரிய உதயம். ~ காலை 05.53. AM. சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.25 PM. சந்திராஷ்ட்டமம் ~ உத்திரம், ஹஸ்தம் . சூலம் ~ வடக்கு. பரிகாரம் ~ பால். இன்று ~ பிரதோஷம் .🙏🙏 🔯🕉SRI RAMAJEYAM🔯🕉 🙏PANCHANGAM VAIKAASI ~ 07 ~ (20.05.2020) WEDNESDAY 1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}. 2.AYANAM ~ UTHTHARAAYANAM. 3.RUTHU ~ VASANTHA RUTHU. 4.MONTTH ~ VAIKAASI (RISHABHA MAASAM} 5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM. 6.THITHI~ THIRAYODHASI. *SRAARTHTHA THITHI.~ THIRAYODHASI 7.DAY ~ WEDNESDAY( SOWMYA VAASARAM). 8.NAKSHATHRAM ~ ASWINI.. YOGAM ~ YOGAM NOT GOOD. KARANAM ~ GARAJAI, VANIJAI. RAGU KALAM ~ 12.00 PM~01.30PM. YEMAGANDAM ~ 07.30 ~ 09.00 AM. KULIGAI : ~ 10.30AM ~12.00 PM. GOOD TIME ~ 09.30 AM TO 10.30 AM. & 04.30 PM ~ 05.30 PM. SUN RISE ~ 05.53 AM. SUN SET ~ 06.25 PM. CHANDRAASHTAMAM ~ UTHTHIRAM, HASTHAM. SOOLAM ~ NORTH. PARIGARAM~ MILK~~~ . TODAY ~ PRADHOSHAM .🙏
TAMILAGAASIRIYAR
ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் பலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது - செங்கோட்டையன் ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு ஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும் ஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும் ஜூன் 20ந் தேதி மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும் ஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்திற்கு தேர்வு நடைபெறும் ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்
TAMILAGAASIRIYAR
தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 672 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4 ஆயிரத்து 578ஆக இருந்த நிலையில், இன்று 84 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 494 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று 36 ஆயிரத்து 624 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 672 ரூபாய் சரிந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 952 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 52 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 700 ரூபாய் சரிந்து, 51 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது.
View More