Arappor Iyakkam
அறப்போர் இயக்கத்தின் தகவல் உரிமை சட்ட பயிற்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த காவல்துறை நண்பர்களுக்கு இது போன்ற உள் அரங்கு கூட்டங்களுக்கு காவல்துறையிடம் எந்த முன் அனுமதியும் வாங்க வேண்டிய அவசியம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என்ற விழிப்புணர்வு பகிரப்பட்டது. விழிப்புணர்வுக்கு நன்றி தெரிவித்து காவல்துறையினர் அமைதியாக திரும்பி சென்றனர்.
Arappor Iyakkam
சாலைகள் மற்றும் நடைபாதைகளை உடைத்து இரும்பு கொடி கம்பம் வைத்து புதிய டாக்டரை வரவேற்கும் ஆளுங்கட்சி. இந்த கம்பம் சரிந்து விழுந்தாலும் விபத்து ஏற்படும் என்று இன்னுமொரு உயிரை இழந்தால் தான் இவர்களுக்கு புரியும் போல. இடம்: ராமாவரம்.#arappor
Arappor Iyakkam
அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு அமைச்சர் மீது வழக்கு தொடுக்க ஆதாரங்கள் எப்படி கிடைத்தன? இந்த கேள்விக்கு பதில்: தகவல் உரிமை சட்டம். இவ்வளவு வலிமையான சட்டம் பற்றி நமக்கு தெரியுமா? நீங்களும் இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு பயன்படுத்த ஒரு அரிய வாய்ப்பு. இலவச தகவல் உரிமை சட்ட பயிற்சி. இன்றைய பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.#arappor
Arappor Iyakkam
அறப்போர் இயக்கம் மாநகராட்சி ஊழல் குறித்து அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் மீது தொடுத்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சியில் நடக்கும் சாலை சுகாதாரம் போன்ற பல ஒப்பந்தங்களில் எப்படி அமைச்சருக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு முறைகேடாகவும் மக்கள் வரிப்பணத்த்திற்கு இழப்பு ஏற்படும் வகையிலும் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையிடமும் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது. ஏற்கனவே ஜனவரி மாதம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்து மார்ச் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இவ்வளவு மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி.
Arappor Iyakkam
டெண்டர்களை செட்டிங் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் ஒரு நாள் சிறை செல்வது நிச்சயம். #SPVelumani
Arappor Iyakkam
தமிழக குடிசைப்பகுதி வாரியத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறல். கூவம் நதி ஓரத்தில் வீடு கட்டி குடியிருந்த மக்களை பல கிமீ தொலைவில் பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் மோசமான அலட்சியமான திட்டமிடலுடன் கட்டிய காங்கிரீட் குகைகளில் அடைத்துப் போட்ட தமிழக அரசு அதற்கு பிறகு அவர்களின் தேவை என்ன என்பதை பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை. செட்டிங் டெண்டர் மூலம் மிகவும் மோசமான தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் 9 வருடங்களிலேயே தண்ணீர் உள்ளே புகுந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மழை காலங்களில் சுவர்கள் முழுவதும் ஈரமாகி ஷாக் அடிக்கிறது. தங்கள் உயிரை பணயம் வைத்து தான் அந்த வீடுகளில் மக்கள் குடியிருக்கிறார்கள். இந்த மனித உரிமை மீறலுக்கு காரணமான குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக அந்த பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்து தரவும் அறப்போர் இயக்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. #arappor
Arappor Iyakkam
தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் அறப்போர் இயக்கம் முதல்வர் உட்பட 4 அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் DVACல் கொடுத்த புகார்கள் குறித்து கேட்ட போது 4 அமைச்சர்கள் மட்டுமா ஊழல் செய்கிறார்கள்? என்று தனியரசு கேட்கிறார். இதன் மூலம் அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்கிறார்கள் என்று மறைமுகமாக அவர் குறிப்பிடுகிறார். ஒரு MLA அதுவும் ஆளுங்கட்சி ஆதரவு MLA இவ்வாறு வெளிப்படையாக வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து அதிமுக அமைச்சர்கள் எப்பொழுது பதில் சொல்ல போகிறார்கள்? காசு கொடுத்து தான் திமுக அதிமுக கட்சிகள் ஓட்டு வாங்குகிறார்கள் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட தனியரசு MLA மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? இது போன்ற பகிரங்க குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்துமா? #arappor #ADMK
Arappor Iyakkam
நாங்கள் தகவல் உரிமை சட்டம் மூலம் கேள்விகள் கேட்பது தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் தொடர்ந்து அந்த சட்டத்தை பயன்படுத்தி கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த சட்டத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கு http://bit.ly/arappor-know-your-rights-registration உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்.#arappor #RTI
Arappor Iyakkam
வருடங்கள் செல்ல செல்ல தகவல் உரிமை சட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை மத்திய மாநில அரசுகள் சிறப்பாக செய்து வருகின்றன. மேலும் மேலும் அதிகமாக இந்த சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே தகவல் உரிமை சட்டத்தை அழிவில் இருந்து நம்மால் காப்பாற்ற முடியும். Right to information act இலவச பயிற்சியை அறப்போர் இயக்கம் வருகிற அக் 20 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை சூளைமேடு பகுதியில் நடத்துகிறது. அரசு ஊழியர்களை கலங்கடிக்கும் சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்த விரும்பும் அனைவரும் கலந்து கொள்ளலாம். உங்கள் விவரங்களை http://bit.ly/arappor-know-your-rights-registration பதிவு செய்யுங்கள். Address: 30, Tamilar Street, Padmanabha Nagar, Choolaimedu. Contact: 7200020099.#arappor #RightToInformationAct #RTI
Arappor Iyakkam
அந்த சாலைகளில் யாராவது வந்தால் தானே பேனர்கள் தடையாக இருக்கும். பள்ளிகளுக்கு விடுமுறை விடுங்கள். கடைகளை மூட சொல்லுங்கள். IT அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொல்லுங்கள். பேனர் வைக்கும் சாலைகளில் போக்குவரத்தை தடை செய்யுங்கள். இதற்கு பிறகு பேனர்கள் மக்களுக்கு எப்படி தடையாக இருக்கும்.#arappor
Arappor Iyakkam
சென்னை முழுவதும் CCTV கேமராக்கள் கண்காணிப்பில் இருப்பதாக பெருமையுடன் கூறும் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இந்த கேமராக்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வாரா..?#arappor
Arappor Iyakkam
10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி பதிவு தபாலில் அனுப்பினால் நீங்கள் கேட்ட தகவல்கள் வீடு தேடி வரும். அரசாங்க அலுவலக படியை கூட நீங்கள் மிதிக்க வேண்டாம். உங்கள் வேலை நேரத்தை வீணடிக்கவும் வேண்டாம். இப்பொழுதே பதிவு செய்யுங்கள். இது ஒரு இலவச பயிற்சி. Register at http://bit.ly/arappor-know-your-rights-registration #arappor
Arappor Iyakkam
3 மணி நேரத்தில் அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு தேவையான தகவலை எப்படி பெற்றுக் கொள்வது என்ற பயிற்சியை அறப்போர் இயக்கம் வழங்குகிறது. இது ஒரு இலவச பயிற்சி. அனைவரும் கலந்து கொள்ளலாம். அக்டோபர் 20, மாலை 5 மணி, சூளைமேடு. தொடர்பு: 7200020099 பதிவு செய்ய: http://bit.ly/arappor-know-your-rights-registration #arappor
Arappor Iyakkam
இன்று நடைபெற்ற மாதாந்திர அறப்போர் தன்னார்வலர்கள் கூட்டம்.#arappor
Arappor Iyakkam
நாம் தனித்தனியாக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தால் அது அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கேட்பதே இல்லை. ஒரு குழுவாக இணைந்து நமது பிரச்சனைகளை பற்றி பேச அரசாங்கத்தை கவனிக்க செய்ய அறப்போர் இயக்கத்துடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் அறப்போர் இயக்கம் செய்யும் மக்கள் சேவைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அதில் உங்கள் பங்களிப்பை கொடுக்கவும் இன்று மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் #CoffeeWithArappor நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். Address: 140A, Rukmani Lakshmipathi Salai, Near Egmore Govt Eye hospital. Contact: 7200020099.#arappor
Arappor Iyakkam
பேனர் உயிரிழப்பு செய்தியை மக்கள் மறந்த பிறகு மீண்டும் பேனர் வைத்துக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல. பொது மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த அபாயகரமான இரும்பு சட்டங்களை அகற்ற வேண்டிய பொறுப்பு காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தது. இதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் மற்றும் மாநகராட்சி AE ஆகியோர் தான் பொறுப்பு. ஆபத்து இருப்பதை தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும். #arappor #JusticeForSubhasri
Arappor Iyakkam
மக்களுக்காக களப்பணியில் ஈடுபட உங்களுக்கு அறப்போர் இயக்கம் ஒரு நேர்மையான தளத்தை ஏற்படுத்தி தருகிறது. சென்னையில் 200 வார்டுகளிலும் மக்கள் பணி செய்ய விருப்பம் இருப்பவர்கள் வருகிற ஞாயிறு மாலை அறப்போர் அலுவலகத்திற்கு கட்டாயம் வாருங்கள்.#arappor
Arappor Iyakkam
சினிமா ரசிகர்கள் திருந்தி விட்டார்கள். தமிழக அரசு எப்பொழுது திருந்த போகிறது. #arappor #JusticeForSubhasri
Arappor Iyakkam
பேனர் வைத்து கொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி பெண்ணின் முகத்தை பார்த்த பிறகு கூட தங்களுக்கு பேனர் விளம்பரம் தான் முக்கியம் என்று கருதும் பிரதமர் மற்றும் முதல்வர் ஆட்சி செய்யும் பூமி இது.#arappor
Arappor Iyakkam
தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றி 30 பேனர்கள் மட்டுமே வைக்க போகிறது என்று உங்களில் எத்தனை பேர் நம்புகிறீர்கள்? இதற்கு முன்பு தமிழக அரசு பேனர் வைப்பதற்கு விதிமுறைகளை பின்பற்றி நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?#arappor
View More